செவ்வாய், டிசம்பர் 09, 2008

வேர் நனைப்போம்!

வேர் நனைப்போம்!

- அறிவுமதி

எதையும் செய்து பிழைக்கலாம்
இழிவைத்
தமிழில்
விதைக்கலாம்
என்றே
துணிந்த
திமிரிலே
எத்தனை
எத்தனைத்
தொலைக்
காட்சி!
எல்லாம்..
எல்லாம்..
அன்னைத் தமிழைக்
கொன்று
முடிக்க
அவாள்கள்
கண்ட
கதிர் வீச்சு!

தமிழர் இல்லா
தொலைக்
காட்சி!
தமிழருக்கான
தொலைக்
காட்சி!

தமிழே
இல்லா
தொலைக்
காட்சி!
தமிழகத்தின்
இழிவாச்சு!
இழிவைத் துடைக்க
உருவச்சு...
எழிலாய்
‘மக்கள்
தொலைக்
காட்சி.!

மருத்துவர் கண்ட
தொலைக்
காட்சி!
தமிழ்
மருத்துவம்
பார்க்கும்
தொலைக்
காட்சி!

மக்கள் நலனே
அதன்
மூச்சு!
மானத்
தமிழே
பயிராச்சு!

முத்தமிழ் வளர்க்கும்
தொலைக்
காட்சி!
மூன்று
ஆண்டுகள்
வயசாச்சு!
தத்தித் தவழும்
வயதினிலும்
தடுமாறாத
செயலாச்சு!

இது
தொடர்ந்து
நடக்க
தோள்
கொடுப்போம்!

இது
படர்ந்து
செழிக்க
வேர்
நனைப்போம்!

12 கருத்துகள்:

இனியவள் புனிதா சொன்னது…

ம்ம்ம் வாழ்த்துகள் மக்கள் தொலைக்காட்சிக்கு. கவிஞரின் வாழ்த்து அருமை :-)

Ramesh சொன்னது…

//எல்லாம்..
அன்னைத் தமிழைக்
கொன்று
முடிக்க
அவாள்கள்
கண்ட
கதிர் வீச்சு!//

Fire in the belly!

சுப.நற்குணன் - மலேசியா சொன்னது…

மதிப்புமிகு கவிஞர் ஐயா அறிவுமதி அவர்களே,

மலேசியாவிலிருந்து இணையம் வழி தங்கள் கவிதையோடு இணைந்து மகிழ்ந்தேன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் உங்கள் கவிதையைப் படித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

இத்தனை நாளும் எங்கே ஐயா போனீர்கள்?

உங்கள் கவிதை மழை இல்லாமல்
பல கவியுள்ளங்கள் பசுமையிழந்து போயின.

இப்போது மீண்டும் வந்தது கண்டு
மழைக்குருவியாய் மனம் பறக்கிறது.

தங்களின் கவிதைகளிலும் உரைவீச்சுகளிலும் மனதை இழந்த ஆயிரமாயிரம் தமிழ் உள்ளங்களில் அடியேனும் ஒருவன்.

திரைப்படப் பாடல்களில் சதைகளை வருணித்துப் பாட மாட்டேன் என்று பேனாவைத் தூக்கி எறிந்துபோன உங்கள் உறுதிமிக்கக் கொள்கையில் கவரப்பட்டவன் நான்.

உங்களின் நட்புக்காலம் பலகாலம் மீண்டும் மீண்டும் படித்த பொற்காலமெல்லாம் இப்போது மனக்கண்ணில் வந்துபோகிறது.

தமிழின மேன்மைக்காக பேனாவைப் போர்வாளாக ஆக்கிக்கொண்டு கவிதை உலகை ஆண்டுவரும் உங்கள் கவிதைக்கதிர்கள் இனிமேல் தடையின்றி தன்னுடைய வீச்சினைத் தொடர வேண்டுகிறேன்.

//மருத்துவர் கண்ட
தொலைக்
காட்சி!
தமிழ்
மருத்துவம்
பார்க்கும்
தொலைக்
காட்சி!//

மக்கள் தொலைக்காட்சி எங்கள் மலேசியாவிலும் தமிழ் மருத்துவம் செய்துகொண்டிருக்கிறது.

ஊடக உலகில் தமிழை மீட்டெடுக்க முளைத்திருக்கும் மக்கள் தொலைக்காட்சி பலமிக்க ஊடகமாக உருவாக வேண்டும் என்பதே உண்மைத் தமிழருடைய அவா!

அன்புடன்,
திருத்தமிழ் ஊழியன்
சுப.நற்குணன்

kutty சொன்னது…

அண்ணன் அறிவுமதியின் அருமையான வரிகள். உண்மையான வரிகள் கூட. 'மக்கள் தொலைக்காட்சி'
மேலும் வளர வாழ்த்துகள்

தமிழ். சரவணன் சொன்னது…

அண்ணன் அருமையான கவிதை

தமிழ். சரவணன் சொன்னது…

அண்ணன் அருமையான கவிதை

மழைக்காதலன் சொன்னது…

மிக அருமை....

தீபச்செல்வன் சொன்னது…

உங்கள் வலையை இன்றுதான் பார்த்துப்போகிறேன். ஆறுதலாக தொடர்பு கொளளுகிறேன்.

தீபச்செல்வன்

HS சொன்னது…

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

தமிழ். சரவணன் சொன்னது…

அருமையாண கவிதை

ஒளியவன் சொன்னது…

//
இழிவைத் துடைக்க
உருவச்சு...
//

உருவாச்சு என்பதின் தட்டச்சுப்பிழையா அல்லது உரு + அச்சு ஆ?

மக்கள் தொலைக்காட்சி சுவைஞனில் நானும் ஒருவன்.

மகிழ்ச்சி!

தமிழ் மதி சொன்னது…

அருமை