வெள்ளி, ஏப்ரல் 11, 2008

அன்புள்ள ஞாநிக்கு…

அன்புள்ள ஞாநிக்கு…
… அறிவுமதி…..
.
அன்புள்ள ஞாநி! உங்கள் பழைய நண்பன் அறிவுமதி பேசுகிறேன்.

அவ்வப்போது நீங்கள் செய்கிற தவறுகளை அவ்வப்போது நட்புரீதியாகவே சுட்டிக்காட்டி இப்படியெல்லாம் எழுதுதல் நாகரிகமா? நியாயமா? என்று நேரிடையாகவே தங்களிடம் கேட்டிருக்கிறேன்.

இனி அப்படியெல்லாம் எழுதமாட்டேன் என்று எனக்கு நீங்கள் சில வேளைகளில் உறுதிமொழியும் அளித்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையில் உங்களோடு உடன்பட்டு உங்கள் எழுத்துகளை உள்வாங்கி உளம் மகிழ்ந்த எங்களுக்கு…
கொஞ்சகாலமாகவே… உங்கள் எழுத்துகளில் தென்படத் தொடங்கிய ‘நொரநொரப்பு’ உங்கள் சிந்தனைகளை உள்விழுங்க விடாமல் உபத்தரவம் செய்யத் தொடங்கியது.

அப்போதே… விழித்துக் கொண்டு உங்கள் எழுத்துகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினோம்…

சிவப்புடை போட்டுக் கொண்டு
பொதுவுடைமை முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டு
அவர்களிடம் பிடிபடாமல்
தப்பித்து வந்த நீங்கள்…
கருப்புடை போட்டுக் கொண்டு
பெரியாரிய முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டு
அவர்களிடம் பிடிபடாமல்
தப்பித்து வந்த நீங்கள்…
புலிகளின் சீருடை போட்டுக்கொண்டு
புலிகளின் முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டுத்
திரும்புகையில் பிடிபட்ட
ஒருகேடு கெட்டசிங்கள உளவாளியாய்
இப்போது எங்களிடம் நீங்கள்
கையும் களவுமாய்..
பொய்யும் பூணூலுமாய்..
அகப்பட்டிருக்கிறீர்கள்…

கொஞ்ச நாள்களுக்கு முன்பு உங்களிடமும் உங்கள் எழுத்துகளிடமும் கொஞ்சம் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு… இப்படியெல்லாம் ஞாநியை சந்தேகப்படலாமா? என்று கேட்டு… என் கருத்துக்கு உடன்படாமல் உங்கள் பக்கம் நின்றவர்தான் எங்கள் சுப.வீ.

தமிழ்த்தேசீய ‘தென்செய்தி’-யும் எங்கள் ஞாநி என்று தங்கள் கட்டுரையை அண்மையில் வெளியிட்டு மகிழ்ந்தது.

பெரியார் திராவிடர் கழகமும், எங்கள் ஞாநி.. பெரியார் ஞாநி என்று.. பல மேடைகள் தந்து மகிழ்ந்தது.

ஆனால்… இவர்கள் அனைவரிடமும்.. சுப.வீ-க்கு தாங்கள் எழுதிய குமுதம் மடல்வாயிலாக…

நான்..பெரியார் ஞாநியன்று..
பெரியவாள் ஞாநியே..
என்று வெளிப்படையாகத் தெரிவித்துக் கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி ஞாநி. திண்ணியத்திலும் எரையூரிலும் ஆதிக்க சாதிகள் செய்த அட்டூழியங்களை அதட்டிக் கேட்டவர்கள்தாம் ஞாநி.. அந்தச் சிங்கள இயக்குநரையும் தட்டிக்கேட்டவர்கள். அவர்களில் ஒருவர்தான் சுப.வீ. அவரை மட்டும் தனிமைப் படுத்தி.. அவரைத் தலித்துகளுக்கு எதிரானவராகக் காட்டி…
“மொழியால்… இனத்தால் நம்மவரான விடுதலைப்புலிகள்” என்று.. எமது மொழிக்குள்… எமது இனத்திற்குள் உள் நுழைய.. உள் பதுங்க வருகிற உங்கள் சூழ்ச்சியை.. என்னவென்று சொல்வது?!

மொழியால் எப்படி நீதமிழனாவாய்?இனத்தால் எப்படி நீதமிழனாவாய்?‘நம்மவர்’ என்கிற சொல்லாடலுக்குள்தமிழர்களாகிய எங்கள் பெயர்கள் அடங்கலாம். ஞாநி என்கிற உன் பெயர் எப்படி அடங்கும்.

நீ யார்…எங்கள் தமிழர்களை எழுப்பிவிடநாங்கள் படாதபாடுபட்டுக்கொண்டிருக்கையில்…எழுகிற தமிழர்களை இடறிவிடமுயற்சி செய்கிற.. நீ யார்?பச்சைப் பார்ப்பான்!

அப்புறம் எப்படி…நீ…தமிழன் பட்டியலில்.. சேர முடியும்? ‘நம்மவர்’ என்ற சொல்லாடலுக்குள் நுழைய முடியும்?ஒரே ஒரு இரட்டை டம்ளர் டீக்கடையையாவது… என்று கேட்டிருக்கிறீர்களே ஞாநி! பல இரட்டை டம்ளர் டீக்கடைகளை அடித்து நொறுக்கி.. ஆதிக்க சாதித் திமிரை ஓடஓட விரட்டிய எம் பெரியார் பிள்ளைகள் தாமய்யா அங்கு வந்து… எங்கள் இனவரலாற்றை இப்படி இழிவு செய்யலாமா என்று எதிர்த்துக் கேட்டது! தனித்த சுப.வீ மட்டும் இல்லை.

சிறுபான்மை பிரிவினரைக் குறித்து ரொம்பவும் அக்கறையாக கவலைப்பட்டு இருக்கிறீர்கள். அந்தச் சிறுபான்மை பிரிவில் பிறந்து மிகச் சிறந்த இடத்திற்கு வந்த அய்யா அப்துல் கலாம் பற்றி எவ்வளவு கேவலமாக எவ்வளவு இழிவாக நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் என்பதை மறுக்க முடியுமா ஞாநி!“மாற்றாக தம்பி சீமானுடன் சேர்ந்து பதில் படம் எடுங்கள்….” எவ்வளவு எளிதாக எழுதிவிட்டீர்கள் ஞாநி!

“காற்றுக்கென்ன வேலி” எடுத்த தம்பி புகழேந்தி பட்டபாடு தெரியாதா ஞாநி!இந்தச் சிங்கள இயக்குநருக்காக இவ்வளவு வரிந்து கட்டிக்கொண்டு வருகிற உங்களை… அன்றைய பட்டினிப் போராட்டங்களில் எல்லாம் எங்களால் பார்க்க முடியவில்லையே ஞாநி!ஈழப் பிரச்சனை குறித்துத் திரிபுபடுத்தித் திரைப்படமெடுத்த பார்ப்பன இயக்குநருக்கு தேசிய விருது. அதை குறித்து வெறும் மேடையில் பேசிய தமிழர்களுக்கு 19 மாத பொடா சிறை தண்டனை…
அந்தத் தண்டனையை அனுபவித்தவர்களில் சுப.வீ-யும் ஒருவர். அவரைப் போய் அதே போல கொதிக்காதது ஏன் என்று எகத்தாளமாக கேள்வி கேட்கிறீர்கள்? எத்தனை முறை சுப.வீ சிறைக்குச் சென்றுள்ளார். எந்தெந்தப் பிரச்சனைகளுக்காகச் சிறைக்குச் சென்றுள்ளார் என்கிற பட்டியலை வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறோம் ஞாநி! அவரைப் போய் கொதிக்காத ஆள் என்று கொழுப்பாக எழுதுதல் பிழையில்லையா ஞாநி!
பொடா கொடுமை பற்றி சுப.வீ எழுதிய வலி சுமந்த தொடரை.. தொடரவிடாமல் தடுத்த நீங்களா ஞாநி, கருத்துரிமை பற்றி பேசுவது?
“என் கருத்துகளை… எல்லோரும் பயன்படுத்தலாம், குமுதம் குழுமம் மட்டும் பயன்படுத்தக் கூடாது” என்று கூறிய நீங்களா ஞாநி, கருத்துரிமை பற்றி பேசுவது?

“பத்திரிகையில்,தொலைக்காட்சியில்,ஊடகங்களில், அவ்வளவு ஏன் உங்கள் சகோதரர் எஸ்.பி.முத்துராமன் உட்பட, தமிழ்த்திரைப்படப் படைப்பாளிகள் சினிமாவில் சொல்லாமல்விட்ட பெண்ணடிமைக் கருத்துகள் ஏதும் மீதம் இருக்க முடியாதே!” என்று எழுதியுள்ளீர்களே ஞாநி!

தாங்கள்.. தங்கள் முற்போக்கான கருத்துகளைத் தங்கள் வலைத்தளத்தில் எழுதுவது, ‘தீம்தரிகிட’ என்கிற தங்களுக்கான இதழில் மட்டுமே எழுதுவது என்ற பத்தியத்தோடுதான் இருக்கிறீர்களா ஞாநி!

நன்றி ஞாநி..

எந்தச் சூழ்நிலையிலும்..நாம் கருத்துக்குக் கருத்து வைத்து..தெளிவுகளை நோக்கிவிவாதிப்போம்… மற்றபடி உங்கள்மீது எங்களுக்கு எவ்வித வன்மமும் இல்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக.. உங்களை உழைக்கவிடாமல் உட்காரவைத்துச் சோறு போட்ட.. போடுகிற.. சமூகம் தமிழ்ச் சமூகம். அந்தச் சமூகத்திற்கு சிறிதும் நன்றியில்லாமல் நீங்கள் செய்கிற இந்த ஈனக் காரியங்கள் குறித்து உங்களுக்கு வெட்கமே இல்லாமல் போயிற்றே! அது தான் ஞாநி வருத்தமாக இருக்கிறது!

சிங்கள இயக்குநருகாக வன்முறை என்று வரிந்து கட்டிக்கொண்டு வருகிற நீங்கள்…தில்லை நடராசர் கோயிலில்.. ஆறுமுக சுவாமி அவர்களை, தீட்சிதர்கள் அடித்து நொறுக்கிய போது.. வன்முறை என்று வாயைத் திறக்கவில்லையே.. ஏன் ஞாநி?

கடைசியாக சொல்லிக் கொள்வது இது தான் ஞாநி!

எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம் !

இல்லை.. இல்லை…

அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம்.

நீங்கள்.. உங்கள் சாத்திரப்படியே மாட்டி விட்டுக் கொள்ளுங்கள் ஞாநி!எங்களால் முடியாது!

நன்றிகளுடன்….
அறிவுமதி
சென்னை
08-ஏப்ரல்-2008

14 கருத்துகள்:

தமிழ்நதி சொன்னது…

உணர்வுபொங்கும் வார்த்தைகள். வாசிப்பவர்களுள்ளும் புகுந்துவிடுகிறது உங்கள் தார்மீக கோபம்.

chakkaravarthi.G சொன்னது…

அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு
தமிழ் வணக்கம் ...

தீ வார்த்தைகள் அனைத்தும் ....
சில மனிதர்களின்
அறிவாளித்தனமான எழுத்துக்களால்
உண்மை மறைக்கபடுவதை
அழகாக உணர்வுபூர்வமாக
எழுதியமைக்கு நன்றி...

சக்கரவர்த்தி
சென்னை .

Dr. சாரதி சொன்னது…

அருமை சரியாக சொன்னீர்கள்

சுப.நற்குணன் - மலேசியா சொன்னது…

வணக்கம் கவிஞர் அறிவுமதி ஐயா,

எனது 'திருமன்றில்' திரட்டியில் தங்களின் வலைப்பதிவை இணைத்துள்ளேன். பார்க்கவும்.

http://thirumandril.blogspot.com/

தாங்கள் விரும்பினால் திருமன்றிலுக்கு உங்கள் வலைப்பதிவில் தொடுப்பு கொடுக்கலாம்.

நன்றி.

Minnveli சொன்னது…

அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு
உங்கள் அன்புத் தம்பி யாழன் ஆதி (இராம. பிரபு) எழுதுவது...


வணக்கம்

ஞாநிக்கு தாங்கள் எழுதிய மடலை வாசித்தேன். தமிழர் வாழ்வை தமிழர் கெடுக்கும் அவலம் நிறைந்த மண்ணிலே பார்ப்பான் ஒருவன் தன் குலத்தொழிலை ‘ஒழுங்காக' செய்வதை மிகவும் கவனத்துடன் கண்டித்து தமிழ்க்கடன் ஆற்றியுள்ளீர்கள். அது உங்கள் ரத்தத்தில் கலந்தது.சாதியற்ற தமிழினம் அமைய இத்தகைய களையெடுப்புகளைச் செய்ய வேண்டியுள்ளது. தமிழினம் ஒன்று பட்டு எழ ஒற்றைக்குரலாய் உங்கள் குரல் மட்டும் கேட்கிறது. மீதித்தமிழனெல்லாம் சாதித்தமிழனாய் இருக்கிறானே அண்ணா!

உங்களைப் பார்க்க ஆவலாய் உள்ளது

அன்புடன்
யாழன் ஆதி

Ko.Manivarma சொன்னது…

அய்யா,
நாம் பார்ப்பனர்களை பார்ப்பனர்களாகத்தான் பார்க்க வேண்டும்.
பார்ப்பணியம்என்பதல்லாம்ஏமாற்று சொல்லாகவே தெரிகிறது.
சரியான சாட்டையடி கொடுத்துள்ளீர்கள்.
நன்றி.

Shan Nalliah / GANDHIYIST சொன்னது…

Greetings from norway...shan nalliah

Kathir சொன்னது…

gnaniyin vanjaha vaarthaikalin veechu valimaiyaanathu. karuthu suthanthiram endru solvathellam kayamaik kedayam.

www.iniyahaji.blogspot.com சொன்னது…

வேலுப்பிள்ளையின் பிள்ளைக்கு
செல்லப் பிள்ளைகளே!
கன்னி நிலம் மீட்க, நம் காணி நிலம் காக்க
வன்னிக் காட்டில் கன்னி வெடிகளாய்
வாழும் நம் கண்மணிகளோடு
கரம் கோர்க்க
எம் உயிரின் உயிரான
உறவுகளை காக்க..
எம் உயிர் போகட்டும்
துரோகிகளின் தோட்டாக்களுக்கு...

அடே இராச பக்சே!
சிரிமா பண்டார நாயகா முதல்
ஜெய வர்த்தனா - சந்திரிகா வரை
ஒரு மயிரும் புடுங்க முடியவில்லை!!

மரணத்துக்கு அஞ்சாத
மாவீரர்கள் நாங்கள்..
அதிகார வெறி பிடித்தலையும்
உன் மாமன்களையும்
ராமன்களையும் வீழ்த்தும்
இலங்கேஸ்வரன் இராவணனின்
இளவள்கள் நாங்கள்..
தமிழ் ஈழம் மலரும் நாள்வரை
எம் வருங்காலம் வாழ்வதற்காக
நிகழ்காலத்தை இழக்கவும் இறக்கவும்
தமிழின சொந்தங்கள் தயார்தான்..
சிங்கள சகோதரர்களே...
சமாதானத்திற்க்கு
நீங்களும் தயாரா???????

திறக்கப்படாத உரிமை கதவுகள் சொன்னது…

prema: நல்லது அண்ணா ஒவ்வரு வார்த்தையும் வேல் பாட்சியதுபோல் உள்ளது
நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால்தான் இப்படி பாட துரோகிகளை
ஒழிக்கமுடியும்

prasanth சொன்னது…

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக.. உங்களை உழைக்கவிடாமல் உட்காரவைத்துச் சோறு போட்ட.. போடுகிற.. சமூகம் தமிழ்ச் சமூகம். அந்தச் சமூகத்திற்கு சிறிதும் நன்றியில்லாமல் நீங்கள் செய்கிற இந்த ஈனக் காரியங்கள் குறித்து உங்களுக்கு வெட்கமே இல்லாமல் போயிற்றே! அது தான் ஞாநி வருத்தமாக இருக்கிறது.

entha karuthu not acceptable,because he is writer like you and others

Bhupathi சொன்னது…

The time has come to rewrite the History of Tamils one again.The national parties and the two primary parties are the enemies of Tamils.They must be defeated in the elections.I have started to think that PMK may be better than DMK and ADMK.Vaiko is on the wrong side.

M ARUL RAJ சொன்னது…

Kavinjarkalin thai vedey unakku en tamil vanakkam

ungal kaditham migavum sirappai irunthathu

en valaithalathai ingu vaithullen ungalin parvaikku karuthu kurungal anna kaathu irukiren

http://iniyavan-ingkey.blogspot.com/

http://youthful.vikatan.com/youth/arulrajpoem250309.asp

Enrum Anbudan

M Arul raj

உங்களோடு... சொன்னது…

//நீ யார்…எங்கள் தமிழர்களை எழுப்பிவிடநாங்கள் படாதபாடுபட்டுக்கொண்டிருக்கையில்…எழுகிற தமிழர்களை இடறிவிடமுயற்சி செய்கிற.. நீ யார்?பச்சைப் பார்ப்பான்!//