சனி, ஜனவரி 07, 2006

கடைசி மழைத்துளி - ஹைகூ கவிதை

இரண்டு ஊதுபத்தி
புகையின் அசைவில்
நீ... நான்

***

கவிதை தேர்வு - நண்பன்.

இரண்டு ஊதுபத்தி - புகையின் அசைவில் நீ - நான்.

எத்தனை அலாதியான கற்பனை. கற்பனை தானா? ஒரு வாழ்வியல் அனுபவம் அல்லவா? அசைந்து அசைந்து கிளம்பும் புகையின் மௌனங்களுக்கிடையே ஊதுபத்தியாய் கரைந்து கொண்டிருக்கும் நீயும் நானும்... நம்மிடமிருந்து கிளம்பும் அந்த புகை மண்டலம் ஒன்றுடன் ஒன்று கலந்து யாரிடமிருந்து, எந்த இடத்திலிருந்து, எந்தப் புகை என்று பிரிக்க இயலாத கலவையாய் ஆகிப் போன நீயும் நானும் - என்று வரும் இந்த கலக்கும் நாள்?

ஏக்கமாக இருக்கிறது...

3 கருத்துகள்:

Raghavan alias Saravanan M சொன்னது…

அற்புதம்..

எனக்கு அறிவுமதியின் திரையிசைப் பாடல்களில் சிலவற்றில் அலாதிப் பிரியம்.

உதாரணத்திற்கு,
பிரியாத வரம் வேண்டும் படத்தில் வரும் 'பிரிவொன்றை சந்தித்தேன்' என்ற பாடல் (எப்பொழுது கேட்டாலும் முழுப்பாடலையும் கேட்டுவிட்டுத் தான் மறுவேலை)

[முதலில் வைரமுத்து எழுதியது என்று நினைத்தது வேறு விஷயம்]

'இளவேனிற்கால பஞ்சமி' (மனம்விரும்புதே உன்னை படத்திலிருந்து)

பட்டியலில் இன்னும் சில பாடல்கள்.....

அவருடைய நட்புக்காலம்.. படிக்கும் பொழுது நம் மனதோடு மழைக்காலம்..

நல்லதொரு வலைப்பூ.. சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்குங்க அனுபவிச்சு எழுதியிருக்கீங்க...

என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

sri சொன்னது…

sir,please help me by explaining about haikoo.
thamizhil haikoo virku enna porul
senrivu enbadhu haikoo virku inaiyana thamizh vaarthaiya ,udhavungal.
my email lovabledrsri@gmail.com