புரிந்து கொள்ளப்படாத
நாள்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தாமாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன் புன்னகை.
***
வெறுமையான நாட்குறிப்புகள் -
குறிப்பதற்கு ஏதுமற்ற நாள்.
குறிப்பதற்கு உன்னை சந்திக்கவில்லை.
அதனால், நாட்குறிப்பும் வெறும் தாளாயிற்று.
நீயன்றி வேறோர் உலகம் என்று ஒன்றிருந்தால், நாட்குறிப்பிற்கு எத்தனை எத்தனையோ செய்திகள் கிடைத்திருக்கும்.
நீயும் நின் நட்பும் மட்டுமே என் உலகம் என்று ஆகிப் போன பின், உன் சந்திப்பைத் தவிர வேறென்ன நிகழ்வு குறிக்கத் தக்கதான செய்திகளாகி விடும் எனக்கு?
அதனால் அந்தப் பக்கங்கள் வெறும் பக்கங்களாகி விட்டன.
உதடு விரிந்து நீ புன்னகைக்கும் பொழுது, வெளிப்படுமே உன் பல்வரிசையின் வெண்மை - அந்த வெண்மையைப் போல் களங்கமின்றி, பளிச்சென இருக்கும் அந்த வெற்றுக் காகிதங்கள் - ஒரு வேளை உன் புன்னகைகள் தானோ?
***
கவிதை தேர்வு: நண்பன்
8 கருத்துகள்:
இந்த வலைப்பதிவு இன்று தான் என் பார்வையில் பட்டது. என் போன்ற வாசகர்களுக்கு இதுஒரு 'அமுதசுரபி' யாயிருக்குமென்று நினைக்கிறேன். தொடர்ந்து படிப்பேன். நன்றி
நண்பர்களே,
உங்களிடமிருந்து ஒரு சின்ன உதவி தேவை. முன்பு அறிவுமதியவர்களின் "வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்" கவிதைகளை thamil.com ல் படித்தேன். அந்த புத்தகத்தை வாங்க விரும்புகின்றேன். "காமதேனு", "எனிஇண்டியன்" இரண்டிலும் இல்லை. நண்பர்களிடம் சொல்லி வாங்குவதற்கு சென்னையில் எங்கு கிடைக்கும் என்ற விவரம் தேவை. சொல்ல முடியுமா?
என் மின்னஞ்சல் chozanaadan [at] yahoo [dot] com
thanks in advance,
chozanaadan
அறிவுமதியின்அற்புதமான கவிதைகளைத் தருவதற்கு
தங்களுக்கு நன்றிகள்,
ஒவ்வொரி கவிதையும் இரசிக்க
வைக்கிறது..
தம்பி !
கவிதைகளைப்போடும் போதே படைத்தவர் பெயரும் போடலாமே,பின்னூடத்தில் ஒருவர் சொல்லித்தான் அறிவுமதி கவிதைகள் எனத் தெரிகிறது. நல்ல கவிதைகள், சுய படைப்புகளும் வெளியிடுங்கள்.
"எனது டைரி குறித்துள்ளது
உன்னை பார்க்காத நாளை
வெறும் தாளாக!" என்று நான்
எழுதி உள்ளதை முன்பே அறிவுமதி
எழுதி விட்டதை படித்தபொழுது
நான் மிகவும் தாமதமாகவே
எழுத வந்துள்ளதாக தோன்றுகிறது.
- ரவி.
படித்தேன் கவிஞர்
அண்ணன் அறிவுமதி கவிதைகளை
எத்தனை முறை படித்தும் அலுக்கவில்லை
நன்றி
கவிஞரின் புதிய பதிவுகளும் வரட்டும்
அன்பு தம்பி
மேகங்கள் விசய்
கும்பகோணம்
இந்த வலைப்பதிவு இன்று தான் என் பார்வையில் பட்டது. என் போன்ற வாசகர்களுக்கு இதுஒரு 'அமுதசுரபி' யாயிருக்குமென்று நினைக்கிறேன். தொடர்ந்து படிப்பேன். நன்றி
கடற்கரையின் இருள்களில், காமத்தின் காட்சியை பார்க்கும் கண்களுக்கு மத்தியில், " கடற்கரையின் முகம் தெரியாத/ இரவுகளில்/ பேசிக்கொண்டிருந்த நம்மை/நண்பர்களாகவே/உணரும் பாக்கியம் எத்தனை கண்களுக்கு வாய்த்திருக்கும்" என்று நட்பை படம்பிடித்த இந்த பாவலன் ஒரு..பச்சைத் தமிழன்..ஆம் ஐயா இன்று இருந்திருந்தால் இவரையும் இப்படித்தான் அழைத்திருப்பார்.
கருத்துரையிடுக