ஞாயிறு, ஜனவரி 02, 2011

செருப்பைக்காட்டிய கமலுக்கு

செருப்பைக்காட்டிய கமலுக்கு எதிப்பைக்காட்டும் அறிவுமதி

"என்னதான் நகைச்”வை என்றாலும், ஈழத் தமிழனை, சினிமா பைத்தியமாகச் சித்தரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்''... என்கிற விகடன் விமர்சனக் குழுவிற்கு நன்றிகளோடு...

30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு...
இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க..
கமல் படம்.
மன்மதன் அம்பு.
மார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு
வந்து விட்@டா@மா
என்கிற அளவிற்கு
ஒரே கமலஹாஸன் களும்!
கமல ஹாஸிகளும்!


அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில்
பதுங்கிக் கொண்டு
நூல்தனம் காட்டும் அவரை
பரமக்குடி பையன் என்றும்
பெரியாரின் பிள்ளை என்றும்
பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள்
இந்த
அம்பு...
இராம பக்தர்களின் கைகளிலிருந்து
இராவண திசை நோக்கி
குறிவைக்கப் படுகிற அம்புகளில் ஒன்று
என்பதை
உணர்ந்து திருந்துதல் நல்லது.

கவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப்
பெரும்பகுதித் தமிழர்களுக்கு
அறிமுகமானவர்,
நவராத்திரித் தமிழனை
தசாவதாரத்தால்
முறியடிக்கவும் முயன்றுபார்த்தவர் கமல்.

இந்த மன்மத அம்புவின்
வாயிலாக...
தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை,
தாய்த் தமிழை
இழிவு செய்வதில்
உயிரே.. மணிரத்னம், அங்கவை சங்கவை
புகழ் சுஜாதா ஆகியோரைத்
தாண்ட முயற்சி
செய்திருக்கிறார்.

"தமிழ் சாகுமாம்...
தமிழ் தெருப் பொறுக்குமாம்.'

வீடிழந்து, நாடிழந்து,
அக்காள் தங்கைகளின்
வாழ்விழந்து...
ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்று...
கொத்துக் கொத்தாய்
தம்
சொந்தங்களை
மொத்தமாய்ப் பலியெடுத்த
கொடுமைகளுக்கு
இன்னும் அழுதே முடிக்காத
அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்
இடத்திற்கே போய்..
பனையேறி விழுந்தவரை
மாடு
மிதித்ததைப் @பால...
வாடகை வண்டி ஓட்டுகிறவராக
ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..
பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..
கதா பாத்திரமாக்கி..
ஒரு செருப்பாக அன்று..
இரு செருப்பாகவும்
என்று
கெஞ்ச வைத்து..

இறுதியில்
அந்த எங்கள்
ஈழத் தமிழரை
செருப்பால் அடிக்கவும்
ஆசைப்பட்டு ஏதோவோர்
ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள
முயன்றிருக்கிறீர்களே
கமல்!
அது என்ன ஆத்திரம்!

போர்க்குற்றவாளியாகிய அந்தக்
கயவனின் தானோடு ஆடுகிற
சதைதானா உங்களுடையதும்! ஆம்..
சதைதானே உங்களுடையதும்!

அந்த உலகநாடுகளில் போய்.. பாருங்கள்.
அங்குள்ள கோயில்களில்
கழுத்துகள் நிறைய, கைகள் நிறைய
தங்க நகைகளாய்த் தொங்க விட்டு
உங்களவர்களை அர்ச்சகர்களாக
அவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை!

தங்கள் பிள்ளைகளுக்கான
பரதநாட்டிய பயிற்சிக்காவும்,
அரங்கேற்றத்திற்காகவும்
இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக்
கொடுத்து அழைத்து, வரவேற்று,
சுற்றிக் காட்டி, கண்கலங்க

வழியனுப்பி வைத்து நெகிழ்வதை!
இந்தப் படம் எடுக்கப்போன
இடங்களில் கூட... நீங்கள்
பெரிய்ய நடிகர் என்பதற்காக
உங்களுக்காக
தங்கள் நேரத்தை வீணாக்கி
தாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி,
எவ்வளவோ உதவியிருப்பார்களே!

அத்தகைய பண்பாடு மிக்க
எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு
நீங்கள் காட்டுகிற
நன்றி இதுதானா கமல்!
செருப்புதானா கமல்!

ஈழத் தமிழ் என்றால்
எங்களுக் கெல்லாம்
கண்ணீர்த்
தமிழ்!
குருதித்
தமிழ்!

இசைப்பிரியா என்கிற
ஊடகத் தமிழ்த்தங்கை
உச்சரித்த
வலிசுமந்த
தமிழ்!

ஆனால்.. உங்களுக்கு மட்டும்
எப்படி கமல்...
அது
எப்போதும்
நகைச் சுவைத்
தமிழாக மட்டுமே
மாறிவிடுகிறது!

பேசி நடிக்கத் தமிழ் வேண்டும்.
தாங்கள் நடித்த
படத்திற்குக் கோடிகோடியாய்...
குவிக்க.. தமிழனின் பணம்
வேண்டும்.

ஆனால்
"அவன் தமிழ்
சாக வேவண்டும்
அவன் தமிழ்
தெருப் பொறுக்க
வேண்டும்.''

தெருப் பொறுக்குதல்
கேவலமன்று.. கமல்.
அது
தெருவைத் தூய்மை
செய்தல்!

தோட்டி என்பவர்
தூய்மையின் தாய்..
தெருவை மட்டும் தூய்மை
செய்தவர்கள் இல்லை..
நாங்கள்
உலகையே
தூய்மை செய்தவர்கள்..

"யாதும் ஊரே யாவரும்
கேளிர்' என்று
உலகையே பெருக்கியவர்கள்
உங்கள்.
எங்களைப் பார்த்து
செருப்பைத் தூக்கிக்
காட்டிய
கமல் அவர்களே..
உங்களை
தமிழ்தான்
காப்பாற்றியது.
பசி நீக்கியது. நீங்கள்
வாழ்கிற வீடு, நீங்கள் போகிற
மகிழ்வுந்து,
நீங்கள் உடுத்துகிற உடை
அனைத்திலும்..
உங்கள்
பிள்ளைகள் படிக்கிற
படிப்பில்.. புன்னகையில்
எல்லாம்
எல்லாம்...!
கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட
எங்கள்
ஈழத் தமிழ் உறவுகளின்
சதைப் பிசிறுகள்...
இரத்தக் கவுச்சிகள்
அப்பிக் கிடக்கின்றன.
அப்பிக் கிடக்கின்றன.

மோந்து பாருங்கள்.
எங்கள் இரத்த வாடையை
மோந்து பாருங்கள்
மோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி
உங்கள்
படத்தில் வருகிற கைபேசியின் மேல்
வருகிற
மூத்திர வாடைதானே உங்களுக்கு
அதிகமாய் வரும்.

கமல்..
நகைச் சுவை என்பது
கேட்கும் போது
சிரிக்க வைப்பது!
நினைக்கும் போது
அழ வைப்பது!
ஆனால் உங்கள்
நகைச்சுவை
செருப்பால் அடித்து
எங்களைச்
சிரிக்கச் சொல்கிறதே!
இதில் வேறு... வீரம்..
அகிம்சைக்கான
வியாக்யானங்கள்!

அன்பான கமல்..
கைநாட்டு மரபிலிருந்து எங்களைக்
கையெழுத்து மரபிற்கு
அய்யாவும் அண்ணலும்
கரையேற்றி விட்டார்கள்.
இனியும் உங்கள்
சூழ்ச்சி செருப்புகளை
அரியணையில் வைத்து ஆளவிட்டு
அழகு பார்க்க மாட்டோம்.

சீதையைப் பார்த்து
"உயிரே போகுதே'
பாட மாட்டோம்.
சூர்ப்பநகையின் மூக்கறுபட்ட
வன்மம் அள்ளித்தான்
"உயிரே போகுதே'
பாடுவோம்.
ஆம்.. கமல்
தாங்கள் சொல்லியபடி..
எம்
தமிழ்
தெரு பொறுக்கும்!
எவன்
தெருவில்
எவன் வந்து
வாழ்வது
என்று
தெரு பொறுக்கும்!

அப்புறம்
எவன் நாட்டை
எவன்
ஆள்வது
என்ற
விழிப்பில்
நாடும்
பொறுக்கும்.

அதற்கு
வருவான்
வருவான்
வருவான்
"தலைவன்
வருவான்!'
இந்தத் தலைப்பையாவது
கொச்சை செய்யாமல்
விட்டுவிடுவது நல்லது கமல்.

நீங்கள் பிறந்த இனத்திற்கு
நீங்கள்
உண்மையாக
இருக்கிறீர்கள் கமல்!

நாங்கள்
பிறந்த
இனத்திற்கு
நாங்கள்
உண்மையாக இருக்க வேவண்டாமா?

அன்புடன்
அறிவுமதி

20 கருத்துகள்:

ramg சொன்னது…

மதிப்பிற்குரிய அய்யா, நடிகர் கமலைப் பற்றியும் அவரது தமிழ் உணர்வு பற்றியும் மிகத் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளீர். இதை போன்ற ஒரு சிலரால் நம் தமிழர் மானம் பறிபோய்விடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது

பெயரில்லா சொன்னது…

Neerum ina veri kondavara?Kamal Sonnathu ella vidhathilum unmai.Unga sandhathi kooda thamilai marandhu thirya aasai paduvare..Eduthuk kaatai irupome nam sandhathiaruku..

ரெஜோலன் சொன்னது…

மிகச்சரியானதாக எனக்குத்தோன்றிய கருத்துக்களை மிகச்சரியான கோணத்தில் சுட்டி காட்டிய உங்களுக்கு நன்றி அய்யா

இது போன்ற மனசாட்சி இல்லாமல் மனிதர்களை மாசு படுத்தும் கூட்டம் விரைவிலே வீழ்ந்திட விரும்புகிறேன்

திவ்யா மாரிசெல்வராஜ் சொன்னது…

அய்யா கவிதை மிகவும் அருமை.

Unknown சொன்னது…

தசாவதாரத்தில் வைத்த குடுமியை தொடர்ந்து தலையில் வைத்து கொண்டு கலைத்தொண்டாற்றியிருக்கிறார் கமல் இப்படத்தில், உள்வேடம் மற்றும் வெளிவேடத்திலும் 'பூ'னூலையே சுற்றி வாழ்கிறார். சக நடிகரின் வர்ணம் பார்த்து கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்.

beema சொன்னது…

nanraga irundhathu

பெயரில்லா சொன்னது…

கமலாக இருந்தாலும் குற்றம் குற்றமே !

Unknown சொன்னது…

மிக சரியாக சொன்னீர்கள் கவிஞரே ,தமிழர்களின் சார்பில் நன்றி

Pranavam Ravikumar சொன்னது…

Its good..!

shanker சொன்னது…

தமிழ்தனை காக்க
தமிழனை காக்க
ஏதும் செப்புவதில்
செப்பு காசும்
பெறு மதி
இல்லை

உரைக்கும் உண்மைகள்
உறைக்கும் உண்மைகளாய்
மறுப்பதில்
எவர்க்கும்
அனு மதி
இல்லை

சொல்பவன் செய்யான்
செய்பவன் சொல்லான்
யாவருமறிந்ததே
சொல்லி கொண்டிருப்பதில்
உன் மதி
எங்கே



ஈழ தமிழனின்
நீல குருதியும்
சிந்தும்
கண்ணீர்
செய் மதி
சொல்லுமா?

அரசியல் லாபம்
அறிவியல் லாபம்
பிழைக்கும் கவிதைகள்
பிதற்றுவதில்
வெகு மதி
உண்டோ ?


கமலிசம் தடுக்க
கமலை வெறுக்க
புகழ் வருவதில்
உமக்கு
நிம்மதி
உண்டோ?

கலைகளை கடக்காமல்
கடவுளையும் கடக்காமல்
கடல் தனையும் கடக்காமல்
அறிவியல்
தேடும்
அறிவு மதி
எங்கே???????

Desanthiri சொன்னது…

anne pinnetenga,........aanalum avenga thiruntha mattange anne.... otta vettana tan thirunthuvanga

arasanmagan சொன்னது…

தமிழால், தமிழனால், தானும் தன்குடும்பமும் வாழ்வதை மறந்த தாமரைபெயர்கொண்டானுக்கு தக்க தமிழ்கவிதை மூலம் பதிலுரை அளித்துவிட்டீர்கள் தமிழ்யேந்தலே. தன்மானம் இருந்தால் திருந்தட்டும் - அது இல்லையேல் தமிழ்நாட்டை விட்டு, தமிழ்த்திரையை விட்டு தள்ளி இருக்கட்டும் தாமரை.

பெயரில்லா சொன்னது…

Eelath Thamilkkavignar ayya,

Naan Kamalin theevira rasigan. Iruppinum thaangall vadiththa kanneer varigal ovvondrum kamalukku savukkadi. Iniyaenum thamil unarvulla oruvaraai thnnai nilai niruthikkolla ninaikkum kamalai thirundha edhirpaarpome.

Vaalga ungall sevai.

Malarga Thamil Eelam :-)


- Thamilan Gowrisankar

Gshan சொன்னது…

Kavignar avargalukku,

Naan viliththa adaimoli migach sariyaai porundhum sirchila pulavargalull Vaaliyai pol thaangalum oruvar.

Naan Kamalin theevira visiriyaayinum, avar appadaththil seidhadhu mannikka mudiyaadha kutramaagum. Im mannin kalaignan endru koorikkondu idhai seidhadhu maaperum pilai.

Adhai sutt(u)ikkaatti Thalaivan pugal tharaniyai meendum meettu edukkum enum urudhip padithiyadhil thangalukku immannvaal thamil nandriyum vaalththum navilgiradhu...

- Gowrishankar.

Gshan சொன்னது…

Eelaththu iruttu pokki "thanieelam" ennum parithi parappa viraivil varavirukkum Thalaivanin thadam patri Thamilin manam parappum Arivumathi ayyavukku,

naan oru Kamal rasigan. Iruppinum, avar appadathil seidhadhu, maaperum kutram enbadhai ennaip pol thangalum kadindhuraiththadharku mikka nandri.

Ini oruvanum eelath thamilanai Nagaichuvaikku payanpadutha maattan.

Vaalga ungal thannalamillaath thondu....

ஜானி பிரகாஷ் சொன்னது…

நம் உறவுகளை கேலி செய்தவன் எவனாக இருந்தாலும் என்ன ???
இந்த கவிதை கசையடி அருமை .. கவிஞரே ...நன்றி ,,

c.senthilkumar சொன்னது…

naathekam pesum aan vepasari kamal .thanathu bennayavathu olungaga valakatum

MadusudanAN சொன்னது…

தோழர் அறிவுமதி அவர்களே...
தாங்கள் திரும்பவும் வரவேண்டும்...
தாங்கள் தனித்து இருப்பது...எங்களை உங்களுடன் சேர்ந்து வாழ எங்களுக்கான உரிமையை மறுப்பதாகவே தோன்றுகிறது..
உங்களுடன் இணைந்து செயல்பட விழைகின்றோம்..உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்..எனக்காக அல்ல..நம் தமிழுக்காக..

விண்ணும் மண்ணும் சொன்னது…

மிக சரியாக சொன்னீர்கள் கவிஞரே ,தமிழர்களின் சார்பில் நன்றி

தமிழ்த்தினேஷ்... சொன்னது…

உண்மைதான்..
கமல் எதிரியல்ல,
துரோகி...