புதன், ஏப்ரல் 02, 2008

நீரோட்ட‌ம்!

----அறிவும‌தி----

கர்நாடகாவிலும்
இந்து!

தமிழ் நாட்டிலும்
இந்து!

இந்துக்கு இந்து
குடிநீர் த‌ர‌மாட்டாயா

இதுதானா இந்துத்துவா
உங்க‌ள்
தேசிய‌
நீரோட்ட‌ம்!

4 கருத்துகள்:

ச.பிரேம்குமார் சொன்னது…

ந‌ல்லா சொன்னீங்க‌ அய்யா. பிரிவுக‌ளில் ஒன்றாக‌ இருந்தாலும் உட்பிரிவுக‌ளால் ச‌ண்டைப் போட்டுக்கொண்டே இருந்தார், க‌டைசியில் இது எங்கு தான் போகும். இவ‌ர்க‌ளுக்கு எல்லாம் இந்தியன் என்னும் உண‌ர்வு எப்போது வ‌ரும்? கிரிக்கெட் பார்க்கும் போது ம‌ட்டும் தானா?

பெயரில்லா சொன்னது…

இக்கவிதையை இப்படி எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும், ஏனெனில் இந்து அல்லாதவரும்
கர்நாடகாவிலும் தமிழ் நாட்டிலும் இருக்கிறார்கள்.

கர்நாடகாவிலும்
திராவிடன்!

தமிழ் நாட்டிலும்
திராவிடன்!

திராவிடனுக்கு திராவிடன்
குடிநீர் த‌ர‌மாட்டாயா

இதுதானா திரா'விடம்'
உங்க‌ள்
திராவிட
நீரோட்ட‌ம்!

பெயரில்லா சொன்னது…

திரு. மரியாதைக்குரிய அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு

என்னை உங்களுக்கு ஞாபகம் வைத்திருக்க முடியாது.
நலமாய் இருக்கீறீர்களா? உங்கள் குடும்பத்தார் அனைவரும் நலமா?

உங்கள் எழுத்துக்களின் தீவிர ரசிகை நான்.நன்றிகள் பல இந்த வலைப்பூவின் மூலமாக உங்களிடம் பேச முடிந்ததற்கு.

அண்ணா, உங்களின் குறும்படங்களின் முயற்சி எவ்வளவு தூரத்தில் உள்ளது. உங்களின் "நீலம்" குறும்பட சி.டி. எங்கே கிடைக்கும்?

தற்போது ஏதாவது புத்தகம் வெளியிட்டுள்ளீர்களா? அப்படியானால் எந்த பதிப்பகம் என்று தெரியப்படுத்தவும்.

தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும்
சாரதா

தோழன் சொன்னது…

கவிஞர் அவர்களுக்கு வணக்கங்கள்,
தேசிய நீரோட்டத்தின் தெளிவை விளக்கியுள்ளீர்.
திராவிடமும் ஏமாற்று வேளையே.